இறைவன் மறப்பற்றுச் சோதி வடிவில்
பிரகாசமுடையவனாய் நிற்பான் அவன். “தொந்தத்தசி” (துவம் - இரண்டு, அற:
தத் -தானான, இறைவன்: அசி - இருக்கிறான்) பிரிவற எல்லாவற்றுள்ளும்
இறைவன் சொந்தம் எனக் கலந்திருக்கிறான் என்பது தத்துவம். “வுரழர வாயவ”
அவன் அதுவாக எந்த மறப்பும் இன்றி நின்மலனாய் இருக்கிறான் என்பது
பொருளாகும். உலகில் விளங்கும் இறைவனைக் குறித்த சிந்தனைகளில்
மேற்கூறிய கருத்துக்கள் மெய்ப்பொருளியலில் (Pரடைழளழிரல) மிக
முக்கியமாகக் கருதப் பெறுகின்றது.
வித்திலிருந்து முளையா அல்லது முளையிலிருந்து வித்தா போன்ற
இத்தன்மைகள் செயல் நிலையில் பொருள்கட்குள் புகுகின்றன. இத்தன்மைகள்
எல்லாம் கடவுளுக்கே உரியன ஆகின்றபோது கடவுளே செயலாற்றுகிறவரும்
நிமித்த காரணனும் இயற்கை உண்மையும் ஆகின்றார். சித்தர்களின்
கருத்துப்படி பொருட்களின் உண்மை நிலையிலிருந்து செயல்படும்
தன்மைகளில் குணங்களாயும் இருப்பாயும் அப்பொருளில் இல்லை.
அப்பொருள் ஆவதை ஏற்பவர் கடவுளாக இருக்கிறார். அவ்வாறு இருப்பவர்
ஒருவரே. அவருக்கு குணங்கள் உள்ளன. மறப்பற்றிருக்கும் நின்மலன் என்பது
அவருக்கே உரிய குணங்களுள் ஒன்றாகும். அவரே செயற்தலைவர் ஆவார்.
வானும் விண்ணும் அவருக்கே உரியன. அவரே மறப்பற்றுப் பிரகாசம்
உடையவராய் எங்கும் தானாகி, எல்லாவற்றுள்ளும் அதிகாரம் உடையவரும்
நின்மலனும் இறைவனும் தலைவனும் ஆகின்றார்.
பெரிய புராணத்தில் அவரைப்பற்றிக் கூறும் பிட்டுக்கு மண் சுமந்த
காதையில், அரசன் பிரம்பால் அடிக்க, அவர் அடி வாங்கி, எவ்வுயிரு
எவ்வுலகு எத்துறைக்கெல்லாம் அவ்வடி கொடுத்த அருள்நிறை நாயகர்
இறைவனாய் இருந்ததைக் கண்டு நாம் உணரலாம். ஔவையார் வகுத்த
செந்தமிழ் வேதம் விளைத்த ஏதமில் ஔவைக்குறள் வாக்கால் நின்மலனாய்
எங்கும் தானாகி நின்றது வாழியவே